இந்தியா
மேகாலயாவில் நில அதிர்வு - ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு
- மேகாலயாவில் இன்று அதிகாலை 3.46 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இது 3.4 ரிக்டர் அளவில் பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.
ஷில்லாங்:
மேகாலயா மாநிலம் டூரா பகுதியின் தென்கிழக்கே 37 கிலோமீட்டர் தொலைவில் இன்று அதிகாலை 3.46 மணியளவில் திடீரென்று நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 3.4 ரிக்டர் அளவில் பதிவானது. இதில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
கடந்த சில வாரங்களாக வட மாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.