இந்தியா
அந்தமான் நிகோபர் தீவில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
- அந்தமான் நிகோபர் தீவில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது.
- இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது.
திக்லிபூர்:
அந்தமான் நிகோபர் தீவின் வடகிழக்கே போர்ட்பிளேர் பகுதியில் இருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.