இந்தியா

மும்பை மரைன் டிரைவிற்கு புதிய பெயர் வைத்த ஆனந்த் மஹிந்திரா- ரியாக்ட் செய்த சூர்யகுமார் யாதவ்

Published On 2024-07-05 10:27 GMT   |   Update On 2024-07-05 10:27 GMT
  • பிசிசிஐ சார்பில் இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
  • சூர்யகுமார் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில், நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி வெற்றி பெற்றது. 17 ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இதையடுத்து, டி20 உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில், பிசிசிஐ சார்பில் இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

அதற்கு முன்னதாக இந்திய அணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. லட்சக் கணக்கான ரசிகர்கள் சாலையில் திரண்டு இந்திய அணி வீரர்களை வரவேற்றனர்.

ரசிகர்கள் கூட்டத்திற்கிடையே, மும்பை கடற்கரை பகுதிகளில் ஒன்றான நரிமன் பாயிண்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் வீரர்கள் ஊர்வலமாக சென்று வான்கடே ஸ்டேடியத்தை அடைந்தனர்.

இந்நிலையில், இந்திய அணியின் இந்த அணிவகுப்பைக் காண திரண்டிருந்த ரசிகர்களை கண்டு திகைத்துப்போன மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா மரைன் டிரைவிற்கு புதிய செயரை வைத்துள்ளார். அதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் ரியாக்ட் செய்துள்ளார்.

இதுகுறித்து ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடுகையில், " இனி இது மும்பையில் உள்ள குயின்ஸ் நெக்லஸ் அல்ல. அது இப்போது மும்பையின் மேஜிக்கல் ஹக்" என்று பதிவிட்டிருந்தார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆட்டத்தை மாற்றும் கேட்சை பிடித்த இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ், ஆனந்த் மஹிந்திராவின் இந்த பதிவிற்கு ரியாக்ட் செய்துள்ளார்.

இதுதொடர்பாக சூர்யகுமார் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில், நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News