இந்தியா

ஆனந்த் மகேந்திரா பார்வையில் 2024-ன் சிறந்த புகைப்படம்

Published On 2024-05-21 09:58 GMT   |   Update On 2024-05-21 09:58 GMT
  • ஷாம்பன் பழங்குடியின மக்கள் 7 பேர் இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.
  • இதை ஆனந்த மகேந்திரா நடப்பு ஆண்டின் சிறந்த புகைப்படம் என பதிவிட்டுள்ளார்.

புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி தமிழகம் உள்பட 21 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் நடந்து முடிந்தது.

இந்திய தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறையாக அந்தமான் நிகோபார் தீவில் கிரேட் நிகோபர் தீவுகளை சேர்ந்த ஷாம்பன் பழங்குடியின மக்கள் 7 பேர் இந்தத் தேர்தலில் வாக்களித்த்துள்ளனர்.

எவ்வித வெளியுலக தொடர்பும் இன்றி வாழும் இந்தப் பழங்குடி மக்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் வாக்களிப்பது எப்படி என்பது குறித்து கற்பிக்கப்பட்டது. இதன்படி வாக்குச்சாவடி சென்ற பழங்குடியின மக்கள் தங்களது வாக்கை பதிவுசெய்தனர்.

இந்நிலையில், பழங்குடியின மக்கள் வாக்குகளைப் பதிவு செய்த புகைப்படத்தை தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஆனந்த மகேந்திரா நடப்பு ஆண்டின் சிறந்த புகைப்படம். ஜனநாயகம்: இது தவிர்க்க முடியாத, தடுக்க முடியாத சக்தி என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News