ஆந்திராவில் ரூ.8 கோடி பறிமுதல் - 2 பேர் கைது
- குழாய்கள் ஏற்றிச் சென்ற லாரியின் உள்ளே ரகசிய அறை அமைத்து பணத்தை கொண்டு சென்றது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- ஐதராபாத்தில் இருந்து குண்டூருக்கு பணத்தை எடுத்து சென்றதாக பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் 175 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 13-ந்தேதி நடைபெற உள்ளது. இதனால் பணம் பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கரிகாபாடு சோதனை சாவடியில் உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.8 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டத்தில் உள்ள கரிகாபாடு சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குழாய்கள் ஏற்றிச் சென்ற லாரியின் உள்ளே ரகசிய அறை அமைத்து பணத்தை கொண்டு சென்றது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐதராபாத்தில் இருந்து குண்டூருக்கு பணத்தை எடுத்து சென்றதாக பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
#WATCH | Andhra Pradesh: NTR district police seized Rs 8 crores cash at the Garikapadu check post in NTR district. The money was discovered in a pipe-loaded lorry in a separate cabin and two individuals have been detained. The money was being transported from Hyderabad to Guntur.… pic.twitter.com/Sqmpq9EIdc
— ANI (@ANI) May 9, 2024