டர்பன் அணிந்த சீக்கியர்கள் காலிஸ்தானியர்களா?: பாஜகவின் பிரிவினை அரசியலுக்கு மம்தா கண்டனம்
- பாஜகவை பொறுத்தவரை டர்பன் அணிந்த ஒவ்வொருவரும் காலிஸ்தானியர்களாக தெரிகிறார்கள்.
- என்னை மத ரீதியாக தாக்கி பேசுகிறார்கள், டர்பன் அணிந்திருந்ததால் என்னை காலிஸ்தானியர் என கூறுவதாக பேசியுள்ளார்.
பாஜகவை பொறுத்தவரை டர்பன் அணிந்த ஒவ்வொருவரும் காலிஸ்தானியர்களாக தெரிகிறார்கள். சீக்கியர்களை மோசமாகச் சித்தரிக்கும் பாஜகவின் பிரிவினைவாத அரசியலை வன்மையாக கண்டிக்கிறேன் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க காவல்துறை அதிகாரி ஒருவரின் வீடியோவை தனது X பக்கத்தில் மம்தா பானர்ஜி பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பேசும் காவல்துறை அதிகாரி, என்னை மத ரீதியாக தாக்கி பேசுகிறார்கள், டர்பன் அணிந்திருந்ததால் என்னை காலிஸ்தானியர் என கூறுவதாக பேசியுள்ளார்.
அந்த வீடியோ பதிவில்,"பாஜகவின் பிரிவினைவாத அரசியல் அரசியலமைப்பு சட்டத்தையே மீறும் வகையில் அமைந்துள்ளது. பாஜகவை பொறுத்தவரை டர்பன் அணிந்த ஒவ்வொருவரும் காலிஸ்தானியர்களாக தெரிகிறார்கள். மேற்கு வங்கத்தில் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுப்பேன். அதைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.