370-வது சட்டப்பிரிவு மீண்டும் வரவே வராது: ஜம்மு காஷ்மீர் தேர்தல் அறிக்கை வெளியிட்ட அமித்ஷா
- ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் அறிக்கையை உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டார்.
- மாணவர்களுக்கு ஆண்டுதோறும் போக்குவரத்து அலவன்சாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்றார்.
ஸ்ரீநகர்:
மொத்தம் 90 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவு என்பது வரலாறு. அது மீண்டும் வரவே வராது.
ஒவ்வொரு ஆண்டும் குடும்பத்தில் உள்ள முதிய பெண்களுக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்.
உஜ்வாலா திட்டத்தின் கீழ் 2 சிலிண்டர் வழங்கப்படும்.
3 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்.
மாணவர்களுக்கு ஆண்டுதோறும் போக்குவரத்து அலவன்சாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.
காஷ்மீரில் பயங்கரவாதம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படுவது உறுதி செய்யப்படும்.
மத்திய அரசு திட்டங்களின் பலன்கள் மாநில மக்களுக்கு கிடைக்க செய்வோம். சுற்றுலாவை வளர்க்க பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.