இந்தியா

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அமலாக்கத்துறை முன் ஆஜர்

Published On 2023-11-02 03:01 GMT   |   Update On 2023-11-02 03:01 GMT
  • மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில் கெஜ்ரிவாலுக்கு சம்மன்
  • சிபிஐ கடந்த ஏப்ரல் மாதம் விசாரணை நடத்தியிருந்தது

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை கடந்த திங்கட்கிழமை சம்மன் அனுப்பியிருந்தது. அதில், இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு விசாரணைக்காக வர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை, 11 மணிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அலுவலகம் சென்று அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு எங்கள் கட்சியை அழிக்க நினைக்கிறது என ஆம் அத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும், ஒருவேளை கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.

டெல்லி மாநில முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்த நிலையில், கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த வழக்கும் கடந்த ஏப்ரல் மாதம் சிபிஐ, கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியிருந்தது. இந்த நிலையில் தற்போது முதன்முறையாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த இருக்கிறது.

Tags:    

Similar News