இந்தியா

ஸ்வாதி மலிவாலுக்கு ஆதரவு தெரிவித்த டெல்லி துணை ஆளுநர்.. ரிவீட் அடித்த அரவிந்த் கெஜ்ரிவால்

Published On 2024-05-21 12:53 GMT   |   Update On 2024-05-21 12:53 GMT
  • மனவேதனையில் இருந்த மலிவால், தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகரமான அனுபவத்தை என்னைத் தொடர்பு கொண்டு விவரித்தார்.
  • அரவிந்த் கெஜ்ரிவால் இந்த சம்பவம் குறித்து மவுனம் காப்பதை சுட்டிக்காட்டிய அவர், பிபவ் குமார் மீது ஆம் ஆத்மி நடவடிக்கை எடுக்காதது குறித்து ஏமாற்றம் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சியின் எம்.பியான ஸ்வாதி மாலிவால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார், கடந்த மே 13ஆம் தேதி கெஜ்ரிவால் வீட்டில் தன்னைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் ஸ்வாதி மலிவாலுக்கு ஆதரவாக டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மனவேதனையில் இருந்த மலிவால், தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகரமான அனுபவத்தையும், சொந்த கட்சியினரிடமிருந்தே தனக்கு ஏற்பட்ட மிரட்டலையும் அவமானத்தையும் என்னைத் தொடர்பு கொண்டு விவரித்தார். மேலும் தனக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பான ஆதாரங்கள் சிதைக்கப்பட்டு வருவதாக அவர் கவலை தெரிவித்தார்.

முந்தய காலங்களில் மலிவால் எனக்கு எதிராகவும் விரோதமாகவும் அப்பட்டமான கருத்துக்களை தெரிவிப்பவராகவும், என்னை நியாயமற்ற முறையில் விமர்சித்தாலும், அவர் மீது நடத்தப்பட்ட இந்த உடல் ரீதியான வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.

மேலும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த சம்பவம் குறித்து மவுனம் காப்பதை சுட்டிக்காட்டிய அவர், பிபவ் குமார் மீது ஆம் ஆத்மி நடவடிக்கை எடுக்காதது குறித்து ஏமாற்றம் தெரிவித்தார். மேலும், டெல்லி தேசிய தலைநகரம் ஆகும். இது போன்ற வெட்கக்கேடான சம்பவங்களும் அரசாங்கத்தின் மவுனமும் உலகளவில் இந்தியாவின் நற்பெயரைக் கெடுக்கின்றன என்று குறிப்பிட்டார்.

மேலும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்த டெல்லி காவல்துறை விவரவில் விசாரணையை முடிக்கும் என்று சக்சேனா உறுதியளித்தார்.

 

 

ஆம் ஆத்மி கட்சியின் எம்பியான ஸ்வாதி மாலிவால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார், கடந்த மே 13ஆம் தேதி கெஜ்ரிவால் வீட்டில் தன்னைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டினார். 

இதற்கு பதிலடி கொடுத்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், ஆளுநரின் கருத்து ஒன்றே இது முழுக்க முழுக்க முழுக்க பாஜகவின் சதி என்று அம்பலமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News