இந்தியா

ஐ.சி.யூ.வில் சிகிச்சை பெறும் அதிஷி.. உடல்நிலை குறித்து மருத்துவர் அப்டேட்

Published On 2024-06-25 05:18 GMT   |   Update On 2024-06-25 05:18 GMT
  • உடல்நிலையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
  • அதிஷியின் உடல் நிலை குறித்து மருத்துவர் புது தகவல்.

டெல்லியில் வரலாறு காணாத வெப்பம் காரணமாக கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்லிக்கு, அண்டை மாநிலமான அரியானா தண்ணீர் திறந்துவிடுகிறது. எனினும், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட குறைவான நீரை வழங்கி வருகிறது.

இதை எதிர்த்து அரியானா அரசு தண்ணீரை திறந்துவிட வலியுறுத்தி அமைச்சர் அதிஷி கடந்த 22 ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வறுகிறார். இந்த நிலையில் அவரது உடல்நிலையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உண்ணாவிரதம் காரணமாக அதிஷியின் உடலில் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு மிக மோசமான அளவுக்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிஷியின் உடல் நிலை குறித்து மருத்துவர் புது தகவல் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைக்கு கொண்டுவரும் போது அதிஷியின் உடலில் சர்க்கரை அளவு மிகவும் குறைவாக இருந்தது. அவர் மயக்க நிலையில் இருந்தார், சோடியம் அளவும் குறைவாக இருந்தது. அவசர சிகிச்சை பிரிவில் உள்ள ஐ.சி.யூ.வில் அதிஷி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு நீர்சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்கும் திரவம் ஏற்றப்பட்டுள்ளது. தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளது. அவரது இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் முடிவுகளை எதிர்நோக்கியுள்ளோம், என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News