'சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்': அமெரிக்காவின் மத சுதந்திர அறிக்கைக்கு இந்தியா கண்டனம்
- மத சுதந்திரம் 2023 என்ற அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டார்.
- சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படுகிறது.
கடந்த வாரம் 200 நாடுகளை உள்ளடக்கிய மத சுதந்திரம் 2023 என்ற அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், இந்தியாவில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் அதிகரிப்பதாகவும், மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்கள், வெறுப்புப் பேச்சு, சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் இடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது
இந்நிலையில், அமெரிக்காவின் இந்த மத சுதந்திரம் 2023 அறிக்கைக்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், "மத சுதந்திரம் குறித்து அமெரிக்காவின் அறிக்கை ஒருதலைபட்சமானது, இந்தியாவில் மத, சமூக கட்டமைப்பை புரிந்துகொள்ளாமல் தவறான தகவல்களை வைத்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை இந்தியா நிராகரிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.