கொச்சி வந்த விமானத்தில் அரியவகை வெளிநாட்டு பறவைகள் கடத்திய 2 பேர் கைது
- 14 வகை வெளிநாட்டு பறவைகளை சூட்கேசில் மறைத்து வைத்து கடத்தி கொண்டு வந்திருக்கின்றனர்.
- வெளிநாட்டு பறவைகளை விமானத்தில் கடத்தி வந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் விமானத்தில் அரியவவை பறவைகளை கடத்தி வந்த 2 பேர் சிக்கினர்.
திருவனந்தபுரத்தை சேர்ந்த சரத் மற்றும் பிந்து ஆகிய இருவரும் தாய்லாந்து நாட்டில் இருந்து சட்ட விரோதமாக 14 வகை வெளிநாட்டு பறவைகளை சூட்கேசில் மறைத்து வைத்து கடத்தி கொண்டு வந்திருக்கின்றனர். சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த வெளிநாட்டு பறவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த பறவைகள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் மதிப்பிலானவை ஆகும். அவை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
வெளிநாட்டு பறவைகளை விமானத்தில் கடத்தி வந்த சம்பவம் தொடர்பாக சுங்கத்துறை மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தொடர்புடைய மற்ற நபர்கள் பற்றி விசாரணை நடத்தப்படடு வருகிறது.