இந்தியா

ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் இருந்தால்தான் அடல் சேதுவில் பயணம்: மிரள வைக்கும் கட்டண விவரம்

Published On 2024-01-13 05:34 GMT   |   Update On 2024-01-13 05:34 GMT
  • மும்பை மற்றும் அருகில் உள்ள நவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக்கடலில் 22 கி.மீ. தூரத்துக்கு பிரமாண்ட பாலம்.
  • நாட்டின் மிக நீளமான கடல்வழி பாலம் என்ற சிறப்பை பெற்ற இந்த பாலம் மும்பை சிவ்ரியில் தொடங்கி நவிமும்பை புறநகரான சிர்லேவில் முடிகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் அருகில் உள்ள நவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக்கடலில் 22 கி.மீ. தூரத்துக்கு பிரமாண்ட பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.

பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இன்று முதல் பொது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த பாலத்தில் கட்டணம் செலுத்திதான் பயணம் மேற்கொள்ள வேண்டும். ஒருவர் நான்கு சக்கர வாகனம் (கார்) வைத்திருந்து, தினந்தோறும் இந்த பாலத்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

கார் ஒரு முறை பயணம் செய்ய 250 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு முறை சென்று திரும்பி வர (Return Journey) 375 ரூபாய் செலுத்த வேண்டும். பாஸ் அடிப்படையில் ஒரு நாளுக்கு 625 ரூபாயும், ஒரு மாதத்திற்கு 12,500 ரூபாயும் செலுத்த வேண்டும். ஒருவர் மாத பாஸ் எடுத்து சென்று வந்தால் வருடத்திற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.

ஏற்கனவே கார் வாங்கும்போது 12 சதவீத வரி, அதன்பின் சாலை வரி, க்ரீன் செஸ், பெட்ரோல்- டீசல் மற்றும் அதன்மீதான 40 சதவீத வரி இவ்வளவும் செலுத்தியபின், இந்த ஒன்றரை லட்சம்...

சாமானிய மக்களுக்கு இது தலை சுற்றுவதுபோன்றுதான் இருக்கும்.

Tags:    

Similar News