இந்தியா

அயோத்தி வன்கொடுமை: பணம் கொடுத்து வழக்கை முடிக்க வற்புறுத்தும் சமாஜ்வாதி தலைவர்கள்.. தாய் அதிர்ச்சி தகவல்

Published On 2024-08-05 02:52 GMT   |   Update On 2024-08-05 02:52 GMT
  • மொயீத் கானுக்கு பத்ராசாவில் உள்ள சொந்தமான பேக்கரி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புல்டோசர் மூலம் இடித்து தள்ளப்பட்டது.
  • சமீபத்தில் நடந்த மருத்துவ பரிசோதனை சிறுமி கருவுற்று இருப்பது கண்டறியப்பட்டது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 12 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இச்சம்பவம் தொடர்பாக சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் மொயீத் கான் மற்றும் அவரது ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மொயீத் கானுக்கு பத்ராசாவில் உள்ள சொந்தமான பேக்கரி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புல்டோசர் மூலம் இடித்து தள்ளப்பட்டது. பேக்கரியில் வைத்து 12 வயது சிறுமியை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மொயீத் கானும், அங்கு ஊழியராக பணியாற்றி வரும் ராஜூ கான் என்பவரும் சேர்ந்து பலாத்காரம் செய்து, அதனை செல்போனில் வீடியோ எடுத்தனர்.

சமீபத்தில் நடந்த மருத்துவ பரிசோதனை சிறுமி கருவுற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த வழக்கை விசாரித்த காவல் அதிகாரி சமஜ்வாதி கட்சியின் தலைவரான மொயித் கானை ஜூலை 30 ஆம் தேதி கைது செய்தனர்.

முதலமைச்சர் யோகி ஆதித்யனாத் மற்றும் மாவட்ட காவல் அதிகாரிகள் இந்த சம்பவத்திற்கு கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதி உதவியும் செய்வதாக கூறினர்.

இந்த நிலையில், பணத்தை வாங்கிக் கொண்டு இந்த வழக்கை முடித்துக் கொள்ள தனக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து உள்ளூர் தலைவரான ரஷித் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வழக்கில் சம்பந்தப்பட்ட முகமது ரஷித் பத்ரஸா நகர் பஞ்சாயத்திற்கான சமாஜ்வாதி கட்சி தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்த பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர், சிறுமியின் தாயார் வழக்கில் சமரசம் எட்ட தனக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக என்னிடம் தெரிவித்தார் என்று கூறினார்.

Tags:    

Similar News