இந்தியா

கைது செய்தால் களங்கம்.. பெண் அதிகாரி பலாத்கார வழக்கில் விமானப்படை விங் கமாண்டருக்கு முன் ஜாமீன்

Published On 2024-09-14 15:07 GMT   |   Update On 2024-09-14 15:07 GMT
  • மேல் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய விசாரணை நடத்தாமல் தட்டிக்கழித்து விட்டதாக தெரிவித்திருந்தார்.
  • ங் கமாண்டர் கைதில் இருந்து தப்பிக்க முன் ஜாமீன் கோரி காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்

ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் விமானப்படை விங் கமாண்டர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் அதிகாரி [flying officer] போலீசில் புகார் அளித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்ரீ நகர் படைத்தளத்தில் உள்ள விங் கமாண்டர் தன்னை கடந்த கடந்த 2023 டிசம்பர் 31 அன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பாலியல் தொல்லை தந்ததாகவும், அது முதல் அந்த கமாண்டரால் தான் உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைக் ஆளானதாக அந்த அங்கு பணியாற்றி வரும் பெண் அதிகாரி புத்கம் [Budgam] காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய விசாரணை நடத்தாமல் தட்டிக்கழித்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த புகார் தொடர்பாக சட்டப்பிரிவு 376(2) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் குற்றம் சாட்டப்பட்ட விங் கமாண்டர் கைதில் இருந்து தப்பிக்க முன் ஜாமீன் கோரி காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் விமானப்படை நிலையத்தில் விங் கமாண்டராக பணிபுரிந்து வருபவர் கைது செய்யப்பட்டால் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுவதாக உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணையை தொடரலாம் என்றும் நீதிமன்றத்தின் அனுமதியின்றி இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News