இந்தியா
நவராத்திரி.. உச்ச நீதிமன்ற கேண்டீனில் இறைச்சி உணவுகளுக்கு தடை- வழக்கறிஞர்கள் எதிர்ப்பு
- உச்ச நீதிமன்ற கேண்டீனில் வெங்காயம், பூண்டு சேர்க்காத சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்படும்.
- இந்த அறிவிப்புக்கு வழக்கறிஞர்கள் அதிருப்தி தெரிவித்து உச்ச நீதிமன்ற பார் கவுன்சிலுக்கு கடிதம்
நவராத்திரி தொடங்கியதால் உச்ச நீதிமன்ற கேண்டீனில் இறைச்சி உணவுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெங்காயம், பூண்டு சேர்க்காத சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு வழக்கறிஞர்கள் அதிருப்தி தெரிவித்து உச்ச நீதிமன்ற பார் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் நவராத்திரி பண்டிகையை ஒட்டி காலம் காலமாக விரதம் கடைப்பிடித்து வருகின்றனர். வழக்கமாக, 9 நாட்களுக்கு விரதம் கடைப்பிடிக்கும் வழக்கறிஞர்கள் வீட்டில் இருந்தே உணவு எடுத்து வரும் நிலையில், முதல் முறையாக உச்ச நீதிமன்றத்தில் இந்நடைமுறையைப் பின்பற்றுவது தவறான முன்னுதாரணம் என அதிருப்தி தெரிவித்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.