இந்தியா

மாவோயிஸ்ட்கள் இல்லாத பகுதியாக பஸ்தார் வெகுவிரைவில் மாறும்: சத்தீஸ்கர் மந்திரி

Published On 2024-11-22 23:56 GMT   |   Update On 2024-11-22 23:56 GMT
  • சுக்மா மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் 10 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
  • அவர்களிடம் இருந்து ஏ.கே. 47 போன்ற துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த என்கவுண்டரில் 10 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து ஐ.என்.எஸ்.ஏ.எஸ். ஏ.கே. 47 போன்ற துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த ஆண்டில் சுக்மா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 207 நக்சலைட்களின் உடல்கள் மீட்கப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சத்தீஸ்கர் மந்திரி அருண் சாவோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சுக்மாவில் பாதுகாப்பு படையினர் மேலும் ஒரு சாதனை படைத்துள்ளனர். பாதுகாப்புப் படைவீரர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

நாங்கள் அரசாங்கத்தை அமைத்த பிறகு, கடுமையான நிலப்பரப்புகளிலும் பாதுகாப்புப் படையினர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

மாவோயிஸ்ட்கள் இல்லாத பகுதியாக பஸ்தார் வெகு விரைவில் மாறி விடும். அங்கு அமைதி மீட்டெடுக்கப்பட்டு வளர்ச்சிப் பாதைக்கு வரும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News