இந்தியா
LIVE

மகாராஷ்டிராவில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலை; ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை: லைவ் அப்டேட்ஸ்

Published On 2024-11-23 01:29 GMT   |   Update On 2024-11-23 05:25 GMT
  • மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 20-ந்தேதி தேர்தல் நடைபெற்றது.
  • ஜார்க்கண்ட் மாநிலதில் 81 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல், ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல், வயநாடு இடைத்தேர்தல், பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது.

2024-11-23 05:25 GMT

மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் 10611 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

2024-11-23 05:16 GMT

மகாராஷ்டிரா தேர்தலே மிகப்பெரிய சதி. மகாராஷ்டிரா தேர்தல் முடிவு மக்கள் முடிவு அல்ல. ஷிண்டே அணியின் எல்லா எம்.எல்.ஏ.க்களும் வெற்றி பெற்றது எப்படி?- உத்தவ் தாக்கரே அணி தலைவர் சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு

2024-11-23 05:13 GMT

ஜார்க்கண்டில் திடீரென மாறிய டிரெண்ட்: முதலில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலை வகித்த நிலையில் தற்போது இந்தியா கூட்டணி 50 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பா.ஜ.க. கூட்டணி 29 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

2024-11-23 05:09 GMT

ஹேமந்த் சோரன் 4921 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

2024-11-23 05:05 GMT

ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா முர்மு சோரன் 3910 வாக்குகள் பின்தங்குகிறார்

2024-11-23 04:57 GMT

ஜார்க்கண்டில் சட்டென்று மாறிய டிரண்ட்: முதலில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலை வகித்த நிலையில் தற்போது இந்தியா கூட்டணி 51 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பா.ஜ.க. கூட்டணி 28 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

2024-11-23 04:54 GMT

ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி 49 இடங்களிலும் பா.ஜ.க. கூட்டணி 30 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

2024-11-23 04:43 GMT

மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணி 196 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மகா விகாஸ் கூட்டணி 77 இடங்களில் முன்னிலை.

ஜார்க்கண்டில் பா.ஜ.க. கூட்டணி 39 இடங்களிலும், இந்தியா கூட்டணி 39 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

2024-11-23 04:42 GMT

பிரியங்கா காந்தி 132543 வாக்குகள் பெற்று 89191 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

2024-11-23 04:38 GMT

மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணி 196 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மகா விகாஸ் கூட்டணி 77 இடங்களில் முன்னிலை.

ஜார்க்கண்டில் பா.ஜ.க. கூட்டணி 39 இடங்களிலும், இந்தியா கூட்டணி 38 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

Tags:    

Similar News