எதிர்க்கட்சிகளுடன் தொடர்புள்ளதாக ஒத்துக்கொள்ளும்படி சித்ரவதை: பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் தகவல்
- பாராளுமன்ற மக்களவைக்குள் புகுந்து வண்ண புகைக்குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
- இது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டு, பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பாராளுமன்றத்தின் மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து இருவர்கள் திடீரென எம்.பி.க்கள் அமர்ந்திருந்த இடத்திற்குள் குதித்து புகைக்குண்டுகளை வீசினர். இதனால் மக்களவை அறை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தன. பின்னர் எம்.பி.க்கள் மக்களவை பாதுகாவர்களுடன் சேர்ந்து அவர்களை மடக்கிப் பிடித்தனர். அதேநேரத்தில் மேலும் இருவர் பாராளுமன்ற வளாகத்திலும் இதேபோன்று தாக்குதலில் ஈடுபட்டனர்.
நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது உபா உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர்ந்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கூடுதல் செசன் நீதிமன்ற நீதிபதி ஹர்தீக் கவுர் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பேர் (மனோரஞ்சன், சாகர் சர்மா, லலித் ஜா, அமோல் ஷிண்டே மகேஷ் குவாவாத் ஆகியோர் "தங்களிடம் வலுக்கட்டாயமாக 70 வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கியதாகவும், எதிர்க்கட்சிகளுடன் தொடர்புள்ளதாக தொடர்புள்ளதா ஒத்துக்கொள்ளும்படி போலீசார் சித்ரவதை செய்தனர் என்றும் தெரிவித்தனர். இதற்காக தங்களுக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்பட்டதாகவும் நீதிபதியுடன் தெரிவித்தனர்.
இது தொடர்பாக போலீசார் பதில் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 17-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கின் 6-வது குற்றவாளி நீலம் ஆசாத் ஆவார்.