இந்தியா

போலீசார் அளிக்கும் பாதுகாப்பில் உடன்பாடில்லை: மம்தாவை சாடிய கவர்னர்

Published On 2024-06-20 08:50 GMT   |   Update On 2024-06-20 08:50 GMT
  • ராஜ்பவனில் இருந்து போலீசார் வெளியேற வேண்டும் என்றார் கவர்னர்.
  • முதல் மந்திரியிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றார்.

கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநில முதல் மந்திரியாக மம்தா பானர்ஜி பதவி வகித்து வருகிறார். இவருக்கும் கவர்னர் ஆனந்தபோசுக்கும் இடையே பல விஷயங்களில் மோதல் இருந்து வருகிறது.

பாராளுமன்ற தேர்தல் முடிந்தபின் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி ராஜ்பவனுக்குச் சென்றார். ஆனால் அங்கு 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் அப்பகுதியில் கூட்டம் கூடுவதற்கு அனுமதி இல்லை எனக்கூறி அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இதற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், மேற்கு வங்காள கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தற்போதைய பொறுப்பாளர் மற்றும் அவரது குழுவினர் இருப்பது எனது தனிப்பட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என நம்புவதற்கு எனக்கு காரணங்கள் உள்ளன.

ராஜ்பவனில் கொல்கத்தா காவல் துறையிடம் நான் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியிடம் தெரிவித்தேன், ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிவித்துள்ளார்.

போலீசார் அனைவரும் ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும் என கவர்னர் ஆனந்த போஸ் நேற்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News