இந்தியா

சாலையில் இருந்த பெரிய பள்ளத்தால் விபத்து: கோமாவில் மனைவி... போலீஸ் பிடியில் கணவர்

Published On 2024-09-23 16:27 GMT   |   Update On 2024-09-23 16:27 GMT
  • காயமடைந்த பெண்ணின் கணவர் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது காவல்துறையின் அநியாயமான நடவடிக்கை.
  • இந்தக் குற்றச்சாட்டைச் செய்த காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் குண்டும் குழியுமாக இருந்த சாலையில் ஏற்பட்ட விபத்தால் பெண் ஒருவர் கோமா நிலைக்கு சேர்த்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அப்பெண்ணின் கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவர் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர் பெரிய பள்ளத்தில் இறங்கி ஏறிய போது கணவரின் பின்பு அமர்ந்து வந்த மனைவி கீழே விழுந்துள்ளார். அதனால் அப்பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய மத்தியப் பிரதேச காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நீலாப் சுக்லா, "காயமடைந்த பெண்ணின் கணவர் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது காவல்துறையின் அநியாயமான நடவடிக்கையாகும். இந்தக் குற்றச்சாட்டைச் செய்த காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து காவல் துணை ஆணையர் அபினய் விஸ்வகர்மா, "இந்த சாலையை பராமரிக்க எந்த நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு கடிதம் எழுதியுள்ளோம், அவர்களின் பதிலுக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News