இந்தியா

ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் ராஜ்யசபா எம்.பி.க்கள் 2 பேர் திடீர் ராஜினாமா

Published On 2024-08-29 12:45 GMT   |   Update On 2024-08-29 13:23 GMT
  • இருவரும் தெலுங்கு தேசம் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • மஸ்தான் ராவ் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசுக்கு மாறியவர்.

புதுடெல்லி:

ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தற்போது சந்திரபாபு நாயுடு முதல் மந்திரியாக உள்ளார். அதேசமயம் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது.

இந்நிலையில், மாநிலங்களவையில் இருந்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களான பீதா மஸ்தான் ராவ் ஜாதவ் மற்றும் வெங்கடரமண ராவ் மோபிதேவி ஆகிய இருவரும் தங்கள் ராஜ்யசபா உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தனர்.

இவர்களது ராஜினாமாவை துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜகதீப் தன்கர் ஏற்றுக்கொண்டுள்ளார் என பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து, மாநிலங்களவையில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பலம் 9 ஆக குறைந்துள்ளது.

இவர்கள் இருவரும் தெலுங்கு தேசம் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மஸ்தான் ராவ் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசுக்கு மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News