ராகுல் காந்தி 4ஜியை சேர்ந்தவர்: பீகார் துணை முதல் மந்திரி தாக்கு
- நேரு குடும்பத்தைச் சேர்ந்த ராகுல் காந்தி 4-வது தலைமுறையைச் சேர்ந்தவர்.
- லாலு பிரசாத்துக்கு உயிர் கொடுக்க தற்போது ஆள் இல்லை என்றார்.
பாட்னா:
பீகார் துணை முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் சாம்ராட் சவுத்ரி. இன்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
2ஜி என்றால் 2வது தலைமுறை அரசியல்வாதி என்றும், 3ஜி என்றால் 3-வது தலைமுறை என்றும், 4ஜி என்றால் 4-வது தலைமுறை அரசியல்வாதி என்றும் நம்புகிறோம்.
ராகுல் காந்தி 4-வது தலைமுறையைச் சேர்ந்தவர். ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, இன்று ராகுல் காந்தி என 4 பேரும் நாட்டைக் கொள்ளையடிக்க உழைத்தவர்கள்.
பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம் என இரு தலைமுறை அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். இரு தலைமுறையினரையும் இழிவுபடுத்தும் வகையில் செயல்படுகின்றனர். இவர்களுக்கு எல்லாம் 2024-ல் பீகார் மக்களும், நாட்டு மக்களும் கணக்கு கொடுப்பார்கள்.
லாலு பிரசாத் யாதவ் 2005-ல் இருந்து தொடர்ந்து தேர்தலில் தோல்வி அடைந்து வருகிறார். நிதிஷ்குமார் அவருக்கு இடையில் உயிர் கொடுத்தார். ஆனால் இப்போது அவருக்கு உயிர் கொடுக்க ஆள் இல்லை என தெரிவித்தார்.
#WATCH | Bihar Deputy CM Samrat Choudhary says, "We believe that 2G means 2 generation politician, 3G means 3 generations and 4G means 4 generation politician... Rahul Gandhi is of the 4th generation. Jawaharlal Nehru, Indira Gandhi, Rajiv Gandhi and today Rahul Gandhi, all four… pic.twitter.com/5ZJhceUYf0
— ANI (@ANI) February 23, 2024