பீகார் கள்ளச்சாராயம்- உயிரிழப்பு எண்ணிக்கை 28ஆக உயர்வு
- கள்ளச்சாராயம் காய்ச்சியது தொடர்பாக 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை.
- மாகர் மற்றும் அவுரியா ஊராட்சியைச் சேர்ந்த 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்.
பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் நேற்று 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், காலை நிலவரப்படி கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்தது. அதன்படி, சிவான் மற்றும் சரண் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில், மேலும் 12 பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், ஏற்கனவே 20 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 28ாகு உயர்ந்துள்ளது.
கள்ளச்சாராயம் காய்ச்சியது தொடர்பாக 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், மாகர் மற்றும் அவுரியா ஊராட்சியைச் சேர்ந்த 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாராயம் குடித்து சுமார் 49 பேர் கடும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலவர உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.