பீகார்: டேங்கர் லாரியில் மதுபாட்டில்களை கடத்திய கும்பல்- மடக்கி பிடித்த போலீஸ்
- டேங்கரில் இருந்த சுமார் 200 பீர் பெட்டிகள் கலால் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
- பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் அருணாச்சல பிரதேசத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது
பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கள்ளச்சாராய விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளது. கள்ளச்சாராயம் குடித்து பலர் அம்மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்தி வந்த பெட்ரோலிய டேங்கர் லாரியை அதிகாரிகள் பிடித்துள்ளனர்.
பெட்ரோலிய டேங்கர் லாரியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்தி கொண்டு வரப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். லாரியின் ஓட்டுநர் தப்பித்து ஓடிய நிலையில் நாகாலாந்து மாநில பதிவு எண் கொண்ட டேங்கர்லாரியை போலீசார் கைப்பற்றினர்.
இந்துஸ்தான் பெட்ரோலிய டேங்கரில் இருந்த சுமார் 200 பீர் பெட்டிகள் கலால் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் அருணாச்சல பிரதேசத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பீகாரில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளதால் அடிக்கடி சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் மாநிலத்திற்குள் கொண்டு வரப்படுகின்றன. சில சமயங்களில் ஆம்புலன்ஸ்களில் கூட மதுபாட்டில்கள் கொண்டு வந்த சம்பவங்களும் நடந்துள்ளன.