இந்தியா
பில்கிஸ் பானு வழக்கு: 13-ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
- தண்டனை பெற்று வந்த 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர்.
- பில்கிஸ் பானு வழக்கு சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியது.
புதுடெல்லி:
கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார்.
இந்த வழக்கில் தண்டனை பெற்று வந்த 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். குஜராத் மாநில அரசு இவர்கள் விடுதலை குறித்து முடிவெடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியிருந்த நிலையில், அம்மாநில அரசு 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்தது.
இந்த வழக்கில் வழக்கில் தண்டனை பெற்று வந்த 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியது மற்றும் நாடு முழுவதும் பல கிளர்ச்சிகளை ஏற்படுத்தி உள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் வழக்கு 13-ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.