இந்தியா

அரியானாவில் 32 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பா.ஜ.க. வேட்பாளர்

Published On 2024-10-09 02:40 GMT   |   Update On 2024-10-09 02:40 GMT
  • பா.ஜ.க.வின் மூத்த தலைவரும் சட்டமன்ற சபாநாயகருமான ஜியான் சந்த் குப்தா 1997 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி.
  • பெரோஸ்புர் ஜிர்கா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மம்மான் கான் 98411 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் வாக்குகள் நேற்று எண்ணப்ப்பட்டன. முதலில் காங்கிரஸ் 50 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சுமார் ஒரு மணி நேரம் கழித்து பா.ஜ.க முன்னிலை விகித்து இறுதியாக 90 இடங்களில் 48 இடங்களில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.

பெரும்பாலான தொகுதியில் இழுபறி நிலவியது. முன்னணி வகித்தவர்கள் பின்தங்குவதும், பின் தங்கியவர்கள் முன்னணி வகிப்பதுமாக இருந்தது. இதனால் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி வாக்குகள் வித்தியாசம் மிகவும் குறைவாக இருந்தது.

இந்த நிலையில் உச்சானா கலன் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் தேவேந்தர் சட்டர் புஜ் 32 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றுள்ளார். இதுதான் அரியானா மாநிலத்தில் குறைந்தபட்ச வாக்கு வித்தியாச வெற்றியாகும்.

"நு" மாவட்டத்தில் உள்ள பெரோஸ்புர் ஜிர்கா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மம்மான் கான் 98411 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதுதான் அதிகபட்ச வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகும். கான் 1,30,497 வாக்குகள் பெற, பா.ஜ.க. வேட்பாளர் நசீம் அகமது 32,056 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

இந்தியன் தேசிய லோக் தளம் கட்சியின் ஆதித்யா தேவிலால் தப்வாலி தொகுதியில் 610 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தினார்.

காங்கிரஸ் வேட்பாளர் ரஜ்பீர் ஃபார்டியா, பா.ஜ.க.வின் மூத்த தலைவர் ஜெய் பிரகாஷ் தலாலை லொஹாரு தொகுதியில் 792 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ஆதம்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் 1268 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பா.ஜ.க. வின் சுனில் சத்பால் சங்வான் தாத்ரி தொகுதியில் 1957 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் கட்சியின் சந்தர் மோகன், பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், சட்டமன்ற சபாநாயகருமான ஜியான் சந்த் குப்தாவை 1997 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

Tags:    

Similar News