இந்தியா

மம்தா பதவி விலகவேண்டும் என துர்கா பூஜையில் மக்கள் பிரார்த்தனை செய்வார்கள்: பா.ஜ.க. தாக்கு

Published On 2024-09-25 03:24 GMT   |   Update On 2024-09-25 03:24 GMT
  • சிலிகுரி மாவட்டத்தில் பா.ஜ.க. சார்பில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இதில், போலி மருந்து மோசடியில் திரிணாமுல் கட்சி முக்கியஸ்தர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றது பா.ஜ.க.

கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தின் சிலிகுரி மாவட்டத்தில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் மாநில தலைவர் சுகந்த மஜும்தார் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

வங்காள மக்கள் துர்கா பூஜையின்போது சடங்குகளில் பங்கேற்பார்கள். ஆனால் எங்கள் மகளுக்கு நீதி வேண்டும் என்பதால் இந்த முறை கொண்டாட்டங்களில் மூழ்க மாட்டார்கள்.

பெண் டாக்டர் கொலை விவகாரத்தில் நியாயமான தீர்ப்பு கிடைக்க வேண்டும்.

மாநில சுகாதாரத் துறையில் எப்படி ஊழல் மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பதைப் பாருங்கள்.

அரசு மருத்துவமனைகளில் போலி மருந்து மோசடியில் திரிணாமுல் காங்கிரசின் முக்கியஸ்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மம்தா பானர்ஜி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட நாளை, நாங்கள் கொண்டாடுவோம், விழாக்கள் தொடங்கும்.

மம்தா பானர்ஜி பதவி விலகவேண்டும் என்பதற்காக துர்கா பூஜையில் மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.

மக்களின் அடங்கிக் கிடக்கும் கோபம் முன்னுக்கு வரப் போகிறது. தவறான செயல்களில் ஈடுபடும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் அதை உணர்வார்கள்.

மாநிலத்தின் லஷ்மி பந்தர் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 மானியம் மற்றும் துர்கா பூஜை கமிட்டிகளுக்கு ரூ.85,000 உதவி மூலம் மக்கள் அனைத்தையும் மறக்க வைக்கும் முதல் மந்திரியின் தந்திரங்கள் இனி பலிக்காது என தெரிவித்தார்.

Tags:    

Similar News