இந்தியா

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 3 அல்லது 4 துண்டுகளாக உடையும்: பா.ஜனதா எம்.பி. சொல்கிறார்

Published On 2024-02-14 07:22 GMT   |   Update On 2024-02-14 07:22 GMT
  • பண மோசடி வழக்கு தொடர்பில் அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் கைது.
  • முதல் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் சம்பாய் புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை.

அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், சம்பாய் சோரன் புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ளார். காங்கிரஸ் ஆதரவுடன் சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபித்தார்.

இந்த நிலையில் இந்த வருடத்தில ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 3 அல்லது 4 துண்டுகளாக உடையும் உன பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளா்.

இதுதொடர்பாக நிஷிகாந்த் துபே கூறுகையில் "சோரன் குடும்பம் ஜெயலுக்கு போகும் என்பதை நான் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறேன். சில எம்.எல்.ஏ.-க்கள் தொடர்பில் இருப்பதாகவும் ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் ஆகியவை தங்கள் இருப்புகளை இழந்துவிடும் எனவும் டுவீட் செய்திருந்தேன்.

நான் தவறாக டுவீட் செய்துள்ளதாக சிலர் நினைக்கின்றனர். எல்லோரும் என்னுடைய டுவீட்டை பாதுகாத்து வைத்துக் கொள்ள கேட்டுக்கொள்கிறேன். ஜார்கண்ட் மோர்ச்சா அல்லது காங்கிரசை பார்க்க முடியாது. 2024-ல் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மூன்று அல்லது நான்கு துண்டுகளாக உடையும்" என்றார்.

Tags:    

Similar News