இந்தியா (National)

தனி மெஜாரிட்டியை இழக்கும் பாஜக: விஸ்வரூபம் எடுத்த காங்கிரஸ்

Published On 2024-06-04 09:03 GMT   |   Update On 2024-06-04 09:03 GMT
  • 2019 தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சியாக திகழ்ந்தது.
  • இந்த முறை 238 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிறது.

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 350 தொகுதிளுக்கு மேல் பிடிக்கும் என கணிக்கப்பட்டது.

ஆனால், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் பாஜக-வுக்கு உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீகார் மாநிலங்களில் பலத்த அடி விழுந்துள்ளது.

இதனால் மத்தியம் 2 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 295 இடங்களில் முன்னணியில் உள்ளது. இப்படியே கடைசி சுற்று வரை சென்றால் பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது.

கடந்த முறை பாஜக 303 தொகுதியில் தனித்து வெற்றி பெற்றிருந்தது. தற்போது 241 தொகுகளில்தான் முன்னணி பெற்றுள்ளது. இது பாஜக-வுக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (14) ஆகியவை பா.ஜனதா ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்தாக வேண்டும் என்ற நிலையில் உள்ளது.

அதேவேளையில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில்தான் வெற்றி பெற்றிருந்தது. இந்த முறை 50 இடங்களை கூட தாண்டாது என பாஜக தலைவர்கள் தொடர்ந்து கூறி வந்தனர்.

ஆனால் காங்கிரஸ் 99 இடங்களில் தற்போது முன்னிலை வகிக்கிறது. கடந்த முறையை விட தற்போது இரண்டு மடங்கு இடங்களில் வெற்றி பெறும் சூழ்நில உருவாகியுள்ளது.

Tags:    

Similar News