மோடி மறுப்பது அவர்களுடைய யுக்தி: அரசமைப்பு விவகாரத்தில் பிரியங்கா காந்தி தாக்கு
- அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ? அதை முதலில் மறுப்பார்கள்.
- ஆனால், அதிகாரத்திற்கு வந்த பிறகு அதை அவர்கள் அமல்படுத்துவார்கள்.
பிரியங்கா காந்தி இன்று குஜராத் மாநிலம் தரம்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜனதா தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள், அரசியலமைப்பை மாற்றுவோம் என கூறி வருகிறார்கள். ஆனால், பிரதமர் மோடி அதை மறுத்து வருகிறார். இது அவர்களுடைய யுக்தி.
அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ? அதை முதலில் மறுப்பார்கள். ஆனால், அதிகாரத்திற்கு வந்த பிறகு அதை அவர்கள் அமல்படுத்துவார்கள். சாமானிய மக்களைப் பலவீனப்படுத்தவும், நமது அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பறிக்கவும் அரசியலப்பை மாற்ற நினைக்கிறார்கள்.
தேர்தலின்போது சூப்பர்மேன் போன்று மேடைகளில் அறிமுகம் ஆகிறார். ஆனால், அவர் பணவீக்கம் மேன் என்பதை மக்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். பிரதமர் மோடியால் உக்ரைன்- ரஷியா இடையிலான போரை நிறுத்த முடியும் என பா.ஜனதா தலைவர்கள் அவர் வலிமையான நபராக முன்நிறுத்த விரும்புகிறார்கள். பின்னர் ஏன் அவரால் அதேபோன்ற வறுமையை ஒழிக்க முடியவில்லை.
இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.