மோடி "அவுட்கோயிங்" பிரதம மந்திரி: ஜெய்ராம் ரமேஷ்
- இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்ததும் ஜாதி அடிப்படையில் நாடு தழுவிய அளவில் கணக்கெடுப்பு நடத்தப்படும்.
- பா.ஜனதா தலைமையிலான அரசு அமலாக்கத்துறை, சிபிஐ, ஐடி ஆகியவற்றை மிகவும் தவறாக வழி நடத்துகிறது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று ராஞ்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதம் அடிப்படையில் வாக்காளர்களை பிரித்தவர் பிரதமர் மோடி. தற்போது இந்து- முஸ்லிம் அரசியல் பற்றி பேசவில்லை என பொய் சொல்கிறார். பிரதமர் மோடி தற்போது அவுட்கோயிங் (வெளியேறும்) பிரதம மந்திரியாகியுள்ளார். தொடக்க கால வாக்குப்பதிவுக்குப் பிறகு அவரின் விரக்தி இதை காட்டுகிறது. அமித் ஷா அவுட்கோயிங் உள்துறை மந்திரி. ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு பொய்கள் என்ற தொற்றில் இருந்த நாம் விடுபடுவோம்.
இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்ததும் ஜாதி அடிப்படையில் நாடு தழுவிய அளவில் கணக்கெடுப்பு நடத்தப்படும். பா.ஜனதா தலைமையிலான அரசு அமலாக்கத்துறை, சிபிஐ, ஐடி ஆகியவற்றை மிகவும் தவறாக வழி நடத்துகிறது. அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பாக பரிசீலனை செய்யப்படும்.
நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் பா.ஜனதா அரசு மிகவும் பலவீனமாக காணப்பட்டது. இந்தியா கூட்டணி ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு ஆகியவற்றை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டது. நாங்கள் இந்த தேர்தலில் அதுபோன்ற நிறுவனங்களை பாதுகாக்க போராடி வருகிறோம். வளங்கள் பகிர்ந்து அளிக்கப்படும் என்பது குறித்து காங்கிரஸ் பேசாது. ஆனால், உள்ளடக்கிய பகிர்ந்தளிப்பு பேசியது.
இவ்வாறு ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.