பா.ஜ.கவுக்கு 100 இடங்களில் கூட வெற்றி கிடைக்காது- மல்லிகார்ஜுன கார்கே
- பா.ஜ.க. தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெற போவதாக பேசி வருகிறார்கள்.
- பிரதமர் மோடி காங்கிரஸ் திட்டங்களை நிறுத்திவிட்டார்.
அமேதி:
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேச்சு விவரம் வருமாறு:-
பிரதமர் மோடியும், பா.ஜ.க. தலைவர்களும் வரும் தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெற போவதாக பேசி வருகிறார்கள். நிச்சயம் அது நடக்காது. நாட்டு மக்களை ஏமாற்றி அவர்கள் திசை திருப்புகிறார்கள்.
அமேதியும், ரேபரேலியும் காங்கிரசின் கோட்டையாக உள்ளன. ஆனால் இங்கு பாரதிய ஜனதா விஷ விதைகளை தூவி வருகிறது. இதன் மூலம் காங்கிரஸ் தொண்டர்களை திசை திருப்ப முயற்சி நடக்கிறது.
பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். 100 இடங்களில் கூட அந்த கட்சிக்கு வெற்றி கிடைக்காது. மக்கள் அவர்களை தூக்கி வெளியே வீசப் போகிறார்கள்.
ஆனால் அதை திசை திருப்ப பா.ஜ.க. சதி செய்கிறது. நாட்டு மக்கள் காங்கிரசுடன் மிகுந்த பிணைப்புடன் உள்ளனர். அதை மாற்ற இயலாது.
பிரதமர் மோடி காங்கிரஸ் திட்டங்களை நிறுத்திவிட்டார். அதற்கு வாக்காளர்கள் நிச்சயம் பதிலடி கொடுப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.