பா.ஜ.க.-வின் பொய்கள் மிகவும் வலிமையானது - கார்கே
- ஒவ்வொரு இந்தியருக்கும் வீடு மற்றும் 24 மணி நேரமும் மின்சாரம், பொருளாதாரம் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக மாறும் என்று சொன்னீர்கள்.
- மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதில் ஏற்பட்ட அதிகப்படியான தாமதம் பல கேள்விகளை எழுப்புகிறது.
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று காலை தனது எக்ஸ் பதிவில் கூறி இருப்பதாவது:-
நரேந்திர மோடி அவர் களே இன்று 2023-ம் ஆண்டின் கடைசி நாளாகும். 2022 வரை ஒவ்வொரு விவசாயிகளின் வருமானமும் இரட்டிப்பாகும் என்று நீங்கள் சொன்னீர்கள். ஒவ்வொரு இந்தியருக்கும் வீடு மற்றும் 24 மணி நேரமும் மின்சாரம், பொருளாதாரம் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக மாறும் என்று சொன்னீர்கள்.
இதெல்லாம் நடக்கவில்லை. ஆனால் இது ஒவ்வொரு இந்தியருக்கும் தெரியும். பா.ஜனதாவின் பொய்கள் மிகவும் வலிமையானது.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
இதேபோல காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாது குறித்த மத்திய அரசை கடுமையாக சாடி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
2021-ம் ஆண்டுக்கான 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதில் ஏற்பட்ட அதிகப்படியான தாமதம் பல கேள்விகளை எழுப்புகிறது. இது கொரோனா தொற்று நோயுடன் மட்டும் தொடர்புடையது அல்ல. சந்தேகத்திற்கு இடமின்றி ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.