இந்தியா

ஏரியில் இரண்டு மணி நேரம் சிக்கிக்கொண்ட மத்திய மந்திரி

Published On 2024-01-08 02:59 GMT   |   Update On 2024-01-08 02:59 GMT
  • ஏரியில் ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கத்திற்கு மந்திரி படகில் பயணம்.
  • சேர வேண்டிய இடத்தை சரியான நேரத்தில் படகு சேராததால் அதிகாரிகள் பதற்றம்.

பீகார் மாநிலத்தில் ஏரியில் பயணம் செய்த மத்திய மந்திரி வழி தெரியாமல் படகோட்டி படகை ஓட்டியதால் இரண்டு மணி நேரம் பரிதவித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு- பால்பண்ணை துறை மந்திரியாக இருப்பவர் பர்ஷோத்தம் ரூபாலா. இவர் ஒடிசா மாநிலத்தில் உள்ள சிலிகா ஏரியில் குர்தா மாவட்டத்தின் பர்குல் என்ற இடத்தில் புரி மாவட்டம் சதாபடா என்ற இடத்திற்கு படகில் சென்றார். இவருடன் பா.ஜனதா தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ராவும் உடனிருந்தார்.

திடீரென மந்திரி சென்ற படகு ஏரியின் நடுப்பகுதியில் நின்றதாக தெரிகிறது. இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அவரை வரவேற்க இருந்த அதிகாரிகள், படகு வரவேண்டிய நேரத்தில் வராமம் நீண்ட நேரமாகியதால் பதற்றம் அடைந்தனர்.

அவர்கள் உடனடியாக மற்றொரு படகு மூலம் ஏரியில் மந்திரி பயணம் செய்த படகை தேடிச் சென்றனர். அப்போது படகு நடுப்பகுதியில் நின்றிருந்தது தெரியவந்தது.

பின்னர், இரண்டு படகுகளும் கரை சேர்ந்தன. புரி மாவட்டத்தில் உள்ள குருஷ்னபிரசாத் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்த கொள்ள மந்திரி படகு மூலம் சென்றார். இந்த சம்பவத்தால் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்தார்.

சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக படகில் தத்தளித்த மந்திரி இரவு 10.30 மணியளவில் புரி சென்றடைந்துள்ளார்.

மீன்வளையில் மோட்டார் சிக்கி படகு செயல்படாமல் இருந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், இரவு நேரம் ஆகியதால் வழி தெரியவில்லை. மாற்றுப்பாதையில் படகு ஓட்டுபவர் சென்றதால் கரை சேர முடியாத நிலை ஏற்பட்டது என மந்திரி தெரிவித்தார்.

Tags:    

Similar News