மெஹந்தி விழாவில் நடனமாடிய மணப்பெண் உயிரிழப்பு
- ஸ்ரேயா ஜெயினின் தந்தை சஞ்சய் ஜெயின் குழந்தை நல மருத்துவராவார்.
- சஞ்சய் ஜெயின் தனது மகளின் திருமணத்திற்காக ஆடம்பர ரிசார்ட்டை பதிவு செய்துள்ளார்.
டெல்லியை சேர்ந்த 28 வயதான ஸ்ரேயா ஜெயினின் திருமண நிகழ்ச்சி உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் நகரில் உள்ள ஆடம்பர ரிசார்ட்டில் நடைபெற இருந்தது. திருமண நிகழ்ச்சியில் அவருடைய உறவினர்கள் கலந்து கொண்டனர்.
மணமகள் தனது மெஹந்தி விழாவில் நடனமாடும்போது சரிந்து விழுந்தார். அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணப்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரேயா ஜெயினின் தந்தை சஞ்சய் ஜெயின் குழந்தை நல மருத்துவராவார். டெல்லியில் உள்ள துவாரகாவில் ஸ்ரேயா ஸ்பெஷலிஸ்ட் கிளீனிக் ஒன்றை நடத்தி வருகிறார். மணமகனும் அவரது குடும்பத்தினரும் லக்னோவை சேர்ந்தவர்கள்.
ஸ்ரேயா எம்பிஏ முடித்துள்ளார். மணமகன் லக்னோவில் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார்.
திருமணத்தில் ஸ்ரேயா ஜெயின் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிம்டால் இன்ஸ்பெக்டர் ஜக்தீப் நேகி கூறுகையில்,
சஞ்சய் ஜெயின் தனது மகளின் திருமணத்திற்காக ஆடம்பர ரிசார்ட்டை பதிவு செய்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது, சனிக்கிழமை மாலை நடைபெற்ற மெஹந்தி விழாவில் நடனமாடும்போது மணப்பெண் ஸ்ரேயா சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
மருத்துவர்கள் அவர் இருதய நுரையீரல் சிக்கல்களால் இறந்திருக்கலாம் என்பதை உறுதிப்படுத்தினர்.
மேலும் ஜெயின் குடும்பத்தினர் சட்ட நடவடிக்கைகளை கோரவில்லை என்றும் அவரது தகனத்தை நடத்தினார்கள் என்றும் அவர் கூறினார்.