இந்தியா
பீகாரில் அடுத்தடுத்து இடிந்து விழும் பாலங்கள்.. ஒரே மாதத்தில் 15வது சம்பவம்
- அம்ஹாரா கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பர்மான் ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்தது.
- பீகாரில் ஒரே மாதத்தில் இடிந்து விழுந்த 15வது பாலம் இதுவாகும்.
பீகார்:
பீகாரில் பாலங்கள் இடிந்து விழுவது தொடர்கதையாகியுள்ளது. அவ்வகையில் நேற்று மாலை மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது.
அம்ஹாரா கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பர்மான் ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்தது.
2008ல் கட்டப்பட்ட இந்த பாலம், 2017ல் ஏற்பட்ட வெள்ளத்தில் முற்றிலும் சேதமடைந்து மக்கள் பயன்படுத்த தகுதியற்றது என அறிவிக்கப்பட்டது. அதன்பின் 2021ல் புனரமைக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
பீகாரில் ஒரே மாதத்தில் இடிந்து விழுந்த 15வது பாலம் இதுவாகும். ஏற்கனவே பாலம் விபத்துகள் தொடர்பாக 15 பொறியாளர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.