இந்தியா

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் சகோதரர் கைது

Published On 2024-10-19 10:42 GMT   |   Update On 2024-10-19 10:42 GMT
  • தேர்தல் சீட் கொடுக்காமல் பணத்தை திருப்பிக் கேட்டால் அவமானப்படுத்தியாகவும் புகார்.
  • கோபால் ஜோஷி மீது மோசடி, எஸ்.சி., எஸ்.டி., சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் சகோதரர் கோபால் ஜோஷியை மகாராஷ்டிராவில் வைத்து பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.

மக்களவை தேர்தலின்போது, கோபால் ஜோஷி மற்றும் 2 பேர் தன்னிடம் ரூ.2 கோடி வாங்கியதாகவும், தனது கணவருக்கு வாய்ப்பு வழங்குவதாக கூறியதாகவும் ஜே.டி.எஸ். முன்னாள் எம்.எல்.ஏவின் மனைவி அளித்த புகார் அளித்திருந்தார்.

மேலும், தேர்தல் சீட் கொடுக்காமல் பணத்தை திருப்பிக் கேட்டால் தன்னை அவமானப்படுத்தியாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த புகாரை தொடர்ந்து, பெங்களூரு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோபால் ஜோஷி மீது மோசடி, எஸ்.சி., எஸ்.டி., சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, தனக்கும், தனது சகோதரர் கோபால் ஜோஷிக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.

Tags:    

Similar News