பட்ஜெட் 2024: 40 ஆயிரம் சாதாரண ரெயில் பெட்டிகள் "வந்தே பாரத்" தரத்துக்கு உயர்த்தப்படும்
- லட்சத்தீவில் சுற்றுலா உள் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- 2024-25-ல் நாட்டின் நிதிப்பற்றாக்குறை 5.1 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும்.
மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு மெட்ரோ ரெயில் சேவை கொண்டு வரப்படும். இந்தியாவில் அன்னிய முதலீடுகள் 596 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. லட்சத்தீவில் சுற்றுலா உள் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜெய்சவான், ஜெய் கிசான், ஜெய் விஞ்ஞான் உடன் ஜெய் அனுசந்தான் (ஆராய்ச்சி) என்பதே மோடி அரசின் குறிக்கோள். 40 ஆயிரம் சாதாரண ரெயில் பெட்டிகள் வந்தே பாரத் தரத்துக்கு உயர்த்தப்படும். ஆன்மீக சுற்றுலாவிற்கான திட்டங்கள் கொண்டு வருவதால் உள்ளூர் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். 2023-24-ல் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி அரசின் செலவு ரூ.44.90 லட்சம் கோடியாகும். ஜூலையில் நாட்டின் வளர்ச்சிக்காக விரிவான திட்டங்கள் அறிவிக்கப்படும்.
2024-25-ல் நாட்டின் நிதிப்பற்றாக்குறை 5.1 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும். மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.