இந்தியா
பட்ஜெட் 2024: மகளிர் நலத்திட்டங்கள் மூலம் 1 கோடி பெண்களை லட்சாதிபதி ஆக்கியுள்ளோம்
- மீன் வளத்துறையில் 55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
- தொழில்நுட்பத்துறை சார்ந்த இளைஞர்களுக்கு இது பொற்காலம்.
மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சுய உதவி குழு கடன் உள்ளிட்ட மகளிர் நலத்திட்டங்கள் மூலம் 1 கோடி பெண்கள் லட்சாதிபதி ஆகியுள்ளனர். வேளாண் துறையில் அரசு மற்றும் தனியார் துறைகள் கூடுதல் முதலீடு செய்வது ஊக்குவிக்கப்படும்.
மீன் வளத்துறையில் 55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. யூரியாவை தொடர்ந்து டி.ஏ.பி. உரங்களிலும் நானோ தொழில்நுட்பம் கொண்டு வரப்படும்.
ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும். கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும்.
தொழில்நுட்பத்துறை சார்ந்த இளைஞர்களுக்கு இது பொற்காலம். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவு 2027-ல் நனவாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.