இந்தியா

தெலுங்கானாவில் விடிய விடிய 45 பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கிய பேருந்து

Published On 2024-09-01 09:24 GMT   |   Update On 2024-09-01 09:30 GMT
  • செல்போன் வீடியோ மூலம் அதிகாரிகளுக்கும், உறவினர்களுக்கும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
  • அதிகாரிகள் பேருந்தில் இருந்து பயணிகளை லாரியில் ஏற்றி கரை சேர்த்தனர்.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா, தெலுங்கானாவில் பலத்த மழை பெய்தது.

இதனால் ஆறு, குளங்கள், ஏரிகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. சாலை எங்கும மழை நீர் தேங்கி நின்றது.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் வெங்கடாபுரம் கிராமத்தில் உள்ள ஏரி நிரம்பி வெள்ள நீர் வெளியேறியதால், 45 பயணிகளுடன் விடிய விடிய வெள்ளத்தில் அரசுப் பேருந்து சிக்கியது.

தங்களை காப்பாற்ற செல்போன் வீடியோ மூலம் அதிகாரிகளுக்கும், உறவினர்களுக்கும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

பிறகு, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பேருந்தில் இருந்து பயணிகளை லாரியில் ஏற்றி கரை சேர்த்தனர்.

பேருந்தில் சிக்கிய பயணிகள் இரவில் உணவு, குடிநீர் இன்றி குழந்தைகளுடன் பயணிகள் தவித்தனர்.

Tags:    

Similar News