இந்தியா

மாணவர்களுக்கு நிதியுதவி: வித்யாலட்சுமி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Published On 2024-11-06 23:01 GMT   |   Update On 2024-11-06 23:01 GMT
  • பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
  • திறமையான மாணவர்களுக்கு இத்திட்டம் பயனளிக்கும்.

புதுடெல்லி:

பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் திறமைவாய்ந்த மாணவர்கள் தரமான உயர்கல்வி நிறுவனங்களில் பயிலுவதற்காக நிதியுதவியை வழங்கும்.

இந்தத் திட்டத்தின் மூலமாக கல்வி கட்டணம் மற்றும் கல்வி தொடர்பான பிற செலவுகளின் முழு தொகையையும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து பிணையில்லாமல் கல்வி கடனாக பெற முடியும்.

தேசிய நிறுவன கட்டமைப்பு தரவரிசையில் முதல் 100 இடங்களில் இருக்கும் அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் 860 தகுதிவாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலுவதற்கு இந்தத் திட்டம் பொருந்தும்.

இந்நிலையில், வித்யாலட்சுமி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மந்திரி அஸ்வினி, நாட்டில் எந்தவொரு இளைஞரும் தரமான உயர்கல்வியை தொடர்வதை நிதி பிரச்சனைகள் தடுக்கக் கூடாது என்பதற்கான திறமையான மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கான பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தெரிவித்தார்.

Tags:    

Similar News