ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்: பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம்
- இன்று மதியம் பிரதமர் ஷேக் ஹசீனா டாக்கா அரண்மனையில் இருந்து வெளியேறினார்.
- நாட்டை விட்டு வெளியேறிய வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
புதுடெல்லி:
வங்காளதேசம் நாட்டில் இடஒதுக்கீடு தொடர்பாக உண்டான மாணவர்கள் போராட்டம் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என மீண்டும் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறை மிகப்பெரிய அளவில் வெடித்தது.
இதற்கிடையே, இன்று மதியம் பிரதமர் ஷேக் ஹசீனா டாக்கா அரண்மனையில் இருந்து வெளியேறினார். பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறிய வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். அப்போது, வங்காளதேச நிலவரம், ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.