இந்தியா

மம்தா மீது கவர்னர் அவதூறு வழக்கு: விசாரணையை ஒத்திவைத்தது மேற்கு வங்காள உயர்நீதிமன்றம்

Published On 2024-07-03 14:50 GMT   |   Update On 2024-07-03 15:48 GMT
  • கவர்னர் மாளிகைக்கு செல்ல பயமாக இருக்கிறது என பெண்கள் தன்னிடம் கூறுகின்றனர்- மம்தா பானர்ஜி.
  • ஆதாரமற்ற குற்றச்சாட்டு என கவர்னர் மாளிகை மறுப்பு தெரிவித்திருந்தது.

மேற்கு வங்காளத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும், கவர்னர் ஆனந்த போஸ்க்கும் இடையில் மோதல் போக்கு இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், சமீபத்தில் நடைபெற்ற சம்பவத்தால் கவர்னர் மாளிகைக்கு செல்ல பயமாக இருக்கிறது என பெண்கள் தன்னிடம் கூறுகின்றனர் என மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை என கவர்னர் மாளிகை கண்டனத்தை பதிவு செய்திருந்தது. மேலும், கவர்னர் உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு இன்று விசாரைணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் சுட்டிக்காட்டியதற்கு ஆளுநரின் வழக்கறிஞர் உரிய நடவடிக்கை எடுத்த பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என நீதிபதி கிருஷ்ண ராவ் தெரிவித்துள்ளார்.

செய்திகள் வெளியான அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கில் குறிப்பிட்டுள்ள செய்திகளை வெளியிட்டவர்களின் பெயர் மனுவில் இடம் பெறவில்லை என நீதிபதி குறிப்பிட்டார். அதற்கு ஆளுநரின் வழக்கறிஞர், அது தொடர்பான விவரங்களை இணைத்து மனுதாக்கல் செய்கிறேன் எனத் தெரிவித்தார்.

கடந்த மே மாதம் 2-ந்தேதி ஆளுநர் மாளிகை ஒப்பந்த பெண் ஊழியர் ஒருவர், ஆளுநர் ஆனந்த போஸக்கு எதிராக காவல் நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல் வழக்கு கொத்திருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கியது.

இதனைத் தொடர்நது ஜூன் 27-ந்தேதி மம்தா பானர்ஜி அவ்வாறு கூறியதாக செய்திகள் வெளியானது. அரசியலமைப்புச் சட்டத்தின் 361வது பிரிவின்படி, ஆளுநரின் பதவிக் காலத்தில் அவர் மீது குற்றவியல் வழக்கு தொடர முடியாது.

Tags:    

Similar News