இந்தியா

நெட் தேர்வு முறைகேடு... விசாரிக்க சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் மீது சரமாரி தாக்குதல்- 4 பேர் கைது

Published On 2024-06-24 03:02 GMT   |   Update On 2024-06-24 03:02 GMT
  • சிபிஐ அதிகாரிகள் குழு ஒன்று நெட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து குறித்து விசாரிப்பதற்காக சென்றது.
  • அதிகாரிகளை கிராம மக்கள் சரமாரியாக தாக்கினர்.

யுஜிசி-நெட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விவகாரத்தை சிபிஐ விசாரிக்கும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணையை தொடங்கியது.

பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா மாவட்டத்தில் சிபிஐ அதிகாரிகள் குழு ஒன்று நெட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து குறித்து விசாரிப்பதற்காக சென்றது.

அப்போது காசியாதீக் என்ற கிராமத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்காக நுழைந்தபோது அங்குள்ள கிராம மக்கள் அதிகாரிகள் வந்த வாகனத்தை சூழ்ந்து கொண்டனர். பிறகு வாகனத்தில் இருந்த அதிகாரிகளை கிராம மக்கள் சரமாரியாக தாக்கினர். இதையடுத்து அங்கிருந்து வெளியேறிய சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கு நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, நெட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் ஒருவரிடமிருந்து செல்போனை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும், இதனால் கோபமடைந்த அந்த நபரின் குடும்பத்தார் அதிகாரிகளை தாக்கியதாகவும் தெரிவித்தனர். வீடியோ காட்சிகளின் அடிப்படையில் அடையாளம் கண்டுபிடித்து 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கிராம மக்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News