இந்தியா

ரூ.50 ஆயிரம் கோடியில் 8 அதிவேக சாலை வழித்தடம்: மத்திய கேபினட் ஒப்புதல்

Published On 2024-08-02 16:00 GMT   |   Update On 2024-08-02 16:00 GMT
  • 936 கி.மீட்டர் நீளத்திற்கு அதிவேக சாலை அமைய இருக்கிறது.
  • தேசிய நெடுஞ்சாலைகளில் தனியார் முதலீடு உட்பட மொத்த மூலதன முதலீடு 6 மடங்கு அதிகரித்துள்ளது.

50 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 8 அதிவேக சாலை வழித்தட திட்டத்திற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

தளவாடத் திறனை மேம்படுத்துதல், நெரிசலைக் குறைத்தல் மற்றும் நாடு முழுவதும் இணைப்பை மேம்படுத்துதல் நோக்கத்தில் இந்த வழித்தட திட்டம் அமையும் எனக் குறிப்பிட்டள்ளார்.

மொத்தம் 936 கி.மீட்டர் நீளம் கொண்டதாக இந்த திட்டம் அமைய இருக்கிறது. ஆக்ரா-குவாலியர் இடையே அதிவேக வழித்தடம் (6 வழிச்சாலை) கராக்பூர்- மோரேக்கிராம் தேசிய அதிவேக வழித்தடம் (நான்கு வழிச்சாலை), தராத்- தீசா- மெசானா- அகமதாபாத் தேசிய அதிவேக வழித்தடம் (6 வழிச்சாலை), அயோத்தி ரிங் ரோடு (நான்கு வழிச்சாலை), ராய்ப்பூர்- ராஞ்சி தேசிய அதிவேக வழித்தடத்தில் பாதல்கயோன்- கும்லா இடையில் ஐந்து வழிச்சாலை, கான்பூர் ரிங் ரோடு (6 வழிச்சாலை) வடக்கு கவுகாத்தி பைபாஸ் (நான்கு வழிச்சாலை), புனே அருகே நாஷிக் பாட்டா- கெத் காரிடார் (8 வழிச்சாலை) ஆகிய வழித்தடம் அமைய இருக்கிறது.

140 கோடி மக்கள் பிரதமர் மோடிக்கு வரலாற்று சிறப்புமிக்க ஆணையை கொடுத்துள்ளனர். அவர்களுக்கு நன்றி. 60 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து மூன்று முறை அரசு அதிகாரத்திற்கு வந்துள்ளது. அரசு அமைந்ததைத் தொடர்ந்து, வாதவன் துறைமுகத்துக்கு ₹76,000 கோடி முதலீடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

உள்கட்டமைப்பு மேம்பாடு ஒரு நாட்டின் பொருளாதார செழுமைக்கான அடித்தளம் மற்றும் அதன் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு முக்கியமானது. உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2.5- 3.0 மடங்கு விளைவைக் கொண்டிருக்கிறது என அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் தனியார் முதலீடு உட்பட மொத்த மூலதன முதலீடு 6 மடங்கு அதிகரித்துள்ளது. 2013-14- ல் சுமார் 50,000 கோடி ரூபாய இருந்த நிலையில், 2023-24-ல் 3.1 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News