இந்தியா

'மத்திய அரசின் பரப்புரை கருவியா?': விக்கிப்பீடியா மீது அவதூறு வழக்கு தொடர்ந்த ANI

Published On 2024-07-09 09:01 GMT   |   Update On 2024-07-09 09:01 GMT
  • மத்திய அரசின் பரப்புரை கருவியாக ANI செயல்பட்டு வருகிறது.
  • விக்கிப்பீடியா இணையதளம் ரூ.2 கோடி நஷ்ட ஈடாக தர வேண்டும் என்று ANI செய்தி நிறுவனம் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளது.

விக்கிப்பீடியா இணையதளத்தின் மீது ANI செய்தி நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.

விக்கிப்பீடியா இணையதளத்தில் "மத்திய அரசின் பரப்புரை கருவியாக ANI செயல்பட்டு வருவதாகவும், போலிச் செய்திகள் மற்றும் திரிக்கப்பட்ட செய்திகளை நாடு முழுவதும் உள்ள செய்தி நிறுவனங்களுக்கு ANI வழங்குவதாகவும் விமர்சனங்கள் உள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து ANI வழக்கு தொடுத்துள்ளது.

விக்கிப்பீடியா இணையதளம் ரூ.2 கோடி நஷ்ட ஈடாக தர வேண்டும் என்று ANI செய்தி நிறுவனம் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நவீன் சாவ்லா, விக்கிப்பீடியாவிற்கு தனது கருத்தை சொல்வதற்கு உரிமை உள்ளது. ஆனால் அது உண்மையா இல்லையா என்பதை சரிபார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த மனு தொடர்பாக பதிலளிக்க விக்கிப்பீடியா இணையதளத்துக்கு நோட்டிஸ் அனுப்பிய நீதிபதி, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News