சண்டிகர் மேயர் தேர்தல்: உச்சநீதிமன்றம் தனது உச்சபட்ச அதிகாரத்தை பயன்படுத்தியது எதற்காக?
- சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தனது உச்சபட்ச அதிகாரமான பிரிவு 142-யை பயன்படுத்தியுள்ளது.
- தேர்தல் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அதிகாரத்தை பயன்படுத்துவதாக தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தனது உச்சபட்ச அதிகாரமான பிரிவு 142-யை பயன்படுத்தியுள்ளது. மிகவும் அவசியப்படுகிறது என்றால் மட்டும்தான் இதை உச்சநீதிமன்றம் பயன்படுத்தும். தேர்தல் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அதிகாரத்தை பயன்படுத்துவதாக தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
சண்டிகர் மேயர் தேர்தலில், தேர்தல் நடத்திய அதிகாரி பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார் என அறிவித்த நிலையில் அதை இன்று உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சண்டிகர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளருக்கு தேவையான இடங்களுக்கு பாதிக்குக் கீழ்தான் இருந்துள்ளது ஆனாலும் அவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளருக்கு பதிவான 8 வாக்குச் சீட்டுகளை எடுத்து வேண்டுமென்றே தேர்தல் நடத்தி அதிகாரி சுயநினைவுடன் சிதைத்துள்ளார் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
ஒரு தேர்தல் நடத்தும் அதிகாரி எவ்வளவு வெளிப்படையாக ஒரு தவற்றைச் செய்துவிட்டு, உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி அப்பட்டமான பொய்யையும் கூறிவிட்டு மிக தைரியமாக இருக்கிறார் என்றால் இது யார் கொடுக்கும் தைரியம் என்ற கேள்வி எழாமல் இல்லை? எனவும் உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டு பாஜக வேட்பாளரை முறைகேடாக வெற்றி பெற்றார் என அறிவித்த தேர்தல் நடத்திய அதிகாரிக்கு எதிரான நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
மேலும், நீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை தெரிவித்ததற்காக தேர்தல் அதிகாரி, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையும் சந்திக்க வேண்டுமென உத்தரவு.