ஆந்திரா - தெலுங்கானா சொத்துக்களை பிரிக்க குழு அமைப்பு
- சில சொத்துகள், நிலம், தண்ணீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை உரிய முறையில் பிரிப்பது முழுமையாக முடிவடையாமல் இருந்து வருகிறது.
- கூட்டத்தில் நிலுவையில் உள்ள சொத்துகளை பிரிப்பது தொடர்பாக தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 2-ந்தேதி பிரிக்கப்பட்டது. தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டு சுமார் 10 ஆண்டுகள் ஆகியும் சில சொத்துகள், நிலம், தண்ணீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை உரிய முறையில் பிரிப்பது முழுமையாக முடிவடையாமல் இருந்து வருகிறது.
இது தொடர்பாக நேற்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா மாநில முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் மகாத்மா ஜோதி ராவ் புலே பிரஜா பவனில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நிலுவையில் உள்ள சொத்துகளை பிரிப்பது தொடர்பாக தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இப்பிரச்சனையை சுமூகமாக முடிக்க இரு மாநில அதிகாரிகள் கொண்ட குழுவை அமைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.