இந்தியா

இனி சில மணி நேரங்களிலேயே செக் கிளியரன்ஸ் செய்யலாம் - ஆர்பிஐ அறிவிப்பு

Published On 2024-08-08 08:02 GMT   |   Update On 2024-08-08 08:02 GMT
  • யூபிஐ மூலம் வரி செலுத்துவதற்கான வரம்பை 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தபட்டுள்ளது.
  • இதற்கு முன்பு செக் க்ளியரிங் செய்ய இரண்டு வேலை நாட்கள் வரை ஆகும்.

புதுடெல்லி:

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நாணயக் கொள்கைக் குழு ஆர்பிஐயின் பணவியல் கொள்கை குறித்து இன்று விவாதத்தித்தது.

இந்த கூட்டத்திற்கு பிறகு குழுவில் எடுக்கப்பட்ட முடிவை ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்.

யூபிஐ மூலம் வரி செலுத்துவதற்கான வரம்பை 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும் இது யூபிஐ மூலம் வரி செலுத்துவதை எளிதாக்கும் என்று சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

மேலும், வங்கி காசோலைகளை சில மணி நேரங்களிலேயே செக் க்ளியரிங் செய்யும் திட்டம் கொண்டுவரப்படவுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

தற்போது, செக் ட்ரங்கேஷன் சிஸ்டம் (CTS) மூலம் செக் க்ளியரிங் செய்ய இரண்டு வேலை நாட்கள் வரை ஆகும் நிலையில், இந்த புதிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News